tamilnadu

img

வடுகபாளையம் கோயில் விழா நடத்த தனிநபர் முட்டுக்கட்டை: விழா கமிட்டி அமைக்க மாவட்ட எஸ்.பி.யிடம் மக்கள் கோரிக்கை

திருப்பூர், அக். 6 - அவிநாசி ஒன்றியம், வடுக பாளையத்தில் கோவில் விழா நடத்த தனிநபர் தன்னிச்சையாக தான்தான் விழாவை நடத்துவேன் எனச் சொல்லி முட்டுக்கட்டை போட்டு வருகிறார். எனவே ஊர் மக்கள் சார்பில் விழா கமிட்டி அமைத்து கோயில் விழாவை எவ்வித பிரச்சனையும் இல்லாமல் நடத்துவதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலையிட வேண்டும் என கிராம மக்கள் கோரியுள்ளனர். சனியன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்தில் வடுகபாளையம் காலனி மக்கள் கோரிக்கை மனு அளித்த னர். இம்மனுவில் கூறியிருப்பதா வது:  அவிநாசி, வடுகபாளையம் கால னியில் அண்ணமார் கோவில், பெருமாள் கோவில், பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளன. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக ராமசாமி, சுப்ரமணியன், பெருமாள், சின்னசாமி ஆகியோர் முன்னின்று கோவில் வரவு செலவுகளைச் செய்து வந்தனர். இந்நிலையில், வேண்டுமென்றே மாகாளி என்ப வர் அவர்தான் கோவில் விழா நடத்துவேன் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு வரவு செலவு பார்த்த போது, ராமசாமி என்பவர் மனைவி யைத் தாக்கினார். பாதிக்கப்பட்ட பெண் சேவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்து, இந்த வழக்கு நீதிமன்றத் தில் உள்ளது. இந்நிலையில், தன் மீது வழக்கு உள்ள நபரே, நான்தான் முன்னின்று திருவிழாவை நடத்துவேன் என்று கூறி விழாவுக்கு ஏற்பாடு செய்து வருகிறார். இது தொடர்பாக சேவூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், அவிநாசி வட்டாட்சி யர் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி பேச்சுவார்த்தை நடந் தது. அதிலும் விழா கமிட்டி அமைக்க மாகாளி மறுத்துவிட்டார். வட்டாட் சியர், இருதரப்பும் ஒன்றுசேர்ந்து விழா நடத்துங்கள், இல்லாவிட் டால் விழா நடத்தக் கூடாது என்று கூறிவிட்டார்.  இந்த நிலையில் வெள்ளியன்று, மீண்டும் அவர் தன்னிச்சையாக விழா ஏற்பாடு செய்து வருகிறார். சேவூர் காவல் நிலையத்தில் நடத் திய பேச்சுவார்த்தையிலும் கமிட்டி அமைக்க மறுத்துவிட்டு ஒருவரே விழா நடத்துவேன் என்று கூறுகி றார். எல்லோரும் என்னிடம்தான் கோவில் விழாவுக்கு வரி கொடுக்க வேண்டும், எந்த கணக்கும் கேட்கக் கூடாது என்றும் மிரட்டுகிறார். அடி யாட்களையும் ஏவிவிடுகிறார். எனவே தனி ஒருவர் விழா நடத்த அனுமதிக்காமல் விழா கமிட்டி அமைத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறப் பட்டுள்ளது.