tamilnadu

img

ஏரியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு

தருமபுரி, ஜன. 13- நல்லம்பள்ளி அருகே கோவி லூர் ஏரியில் குப்பைகளை கொட்டு வதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள் ளது. இதனை தடுத்து  ஏரியை சீர மைக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம் பள்ளி அடுத்துள்ள கோவிலூர் பகுதி யில், 300க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இப்ப குதியில் சேகரமாகும் குப்பைகளை, துப்புரவு தொழிலாளர்கள் எடுத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத் தின் கீழ் தரம் பிரித்து வந்தனர். இந்நி லையில், திடக்கழிவு திட்ட பணி செயல்படாததால் குப்பைகளை சேகரிப்பதை துப்புரவு பணியாளர் கள் நிறுத்தி விட்டனர். இதனால், பொதுமக்கள் கோவிலூர் பகுதியில் உள்ள ஏரியில் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.  இதன் காரணமாக, ஏரியில் தேங்கியுள்ள தண்ணீர் பச்சை நிறத் தில் மாறி, கடும் துர்நாற்றம் வீசி வரு கிறது. மேலும், அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற் பட்டுள்ளது. எனவே, ஏரியில் குப் பைகள் கொட்டுவதற்கு தடை விதிக் கவும், ஏரியை தூர்வார செய்து தர மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.