கோவை, மார்ச் 30-
கோவை மத்திய சிறையில் போதைப் பொருட்கள் புழக்கம் தொடர்பான புகாரைத்தொடர்ந்து சனியன்று காவல் உதவி ஆணையர் தலைமையில் திடீர் சோதனை நடைபெற்றது.கோவை மத்திய சிறைச்சாலையில் தண்டனை கைதிகள்,விசாரணை கைதிகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சட்டவிரோதமாக போதைபொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக தொடர் புகார்கள் வந்தது.இதனையடுத்து கோவை மத்திய சிறையில் உதவி ஆணையர் எழிலரசன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவலர்கள் திடீர் சோதனை நடத்தினார்கள். தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள பிளாக்குகளில், தனித் தனி அறைக்குள் சென்று இந்த சோதனைகள் நடத்தப்பட்டது. இரவு வரை நீடித்த சோதனையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இவை எப்படி,யார் மூலம் சிறைக்குள் கொண்டுவரப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சிறைத்துறை பணியாளர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.