tamilnadu

img

விளைநிலங்களில் உயர்மின் கோபுரம்

விவசாயிகள் ஆவேச மறியல் - கைது

தருமபுரி, நவ.18- உயர்மின் கோபுரம் அமைக்க வலுக்கட்டாயமாக நிலங்களை பறிக் கும் தமிழக அரசை கண்டித்து திங்க ளன்று சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் ஆவேசமிகு மறி யல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயி ரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். மத்திய அரசின் பவர்கிரிட் நிறு வனம் மற்றும் தமிழக அரசின் மின் தொடரமைப்புக் கழகம் சார்பில்  சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள விளைநிலங் கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டங்களை மேற் கொண்டு வருகிறது. இதனை எதிர்த் தும், புதை வழித்தடம் மூலம் திட் டத்தை செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே அமைத்த கோபுரங்களுக்கு வாடகை தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவ சாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் திங்களன்று பல்வேறு இடங்க ளில் ஆவேசமிகு  சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதன்ஒருபகுதியாக தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு  நடைபெற்ற மறியல் போராட்டத் திற்கு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் எஸ்.எஸ்.சின்னராஜ் தலைமை வகித்தார். கரும்பு விவசா யிகள் சங்க மாவட்ட பொருப்பாளர் பி.இளம்பரிதி, விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கே.என்.மல்லை யன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.முத்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, ஒன்றிய செயலா ளர்கள் என்.கந்தசாமி, கே.குப்பு சாமி, விவசாயிகள் சங்க நிர்வாகி கள் எஸ்.தீர்த்தகிரி, எம்.கணேசன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், பென்னாகரத்தில் நடைபெற்ற சாலை மறியல் போரட் டத்திற்கு விவசாயிகள் சங்க பகு திக்குழு செயலாளர் இ.அய்யோதி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கே.அன்பு ரவி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர்கள் ஜி.சக்திவேல், என்.பி.முருகன், எஸ்.வெள்ளியங்கிரி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.எம்.முருகேசன், ரவி, எம்.குமார் மற்றும் பகுதிக் குழு உறுப்பினர் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், பள்ளிப் பாளையம் ஒன்றியம், படைவீட்டில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள் தலைமை வகித்தார். கரும்பு விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் செ.நல்லாக்கவுண்டர், ஒன் றிய தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் தனேந்திரன் முன்னிலை வகித்தனர்.   இதேபோல், பள்ளிப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்  நடை பெற்ற மறியல் போராட்டத்திற்கு மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.வேலாயுதம், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.அசோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி, வாலிபர் சங்க மாவட்ட தலைவர் இ.கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். எருமப்பட்டி ஒன்றியம் பவித்திரத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட பொரு ளாளர் மு.து.செல்வராஜ் தலைமை வகித்தார். பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி யில் நடைபெற்ற மறியல் போராட் டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அன்பழகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல், தாலுகா செயலாளர்  வி .பழனிமுத்து, விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.தங்கவேல் உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.  சங்ககிரியில் விவசாயிகள் சங் கத்தின் மாநில துணைத் தலைவர் விஜய முருகன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் தாலுகா செயலாளர் ராஜேந்திரன், ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் என்.ஜெயலட்சுமி, விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் செந்தில், சிபிஎம் தாலுகா செயலாளர் எஸ்.கே.சேகர், மாவட்ட குழு உறுப்பினர் கே.ராஜாத்தி உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேச்சேரியில் சங்க மாவட்ட துணை தலைவர்  மணிமுத்து தலை மையில் மறியல் போராட்டம் நடை பெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட துணை தலைவர் பி.தங்கவேலு, சிபிஎம் மேட்டூர் தாலுகா செயலாளர் வசந்தி, விவசாய சங்க நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் பாலாஜி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.