tamilnadu

img

உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம் இழப்பீடு வழங்காததால் விவசாயிகள் ஆவேசம்

பொன்னாகரம், ஜன. 25- தருமபுரி அருகே உயர்மின் கோபு ரம் அமைப்பதற்கு உரிய இழப்பீடு வழங்காததால் அப்பணிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் திருச்சூர் முதல்  சென்னை திருவலம் வரை உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. தருமபுரி மாவட் டத்தில் இதற்கென நிலம் கையகப் படுத்தப்பட்டு பணிகள் துவங்கி நடை பெற்று வருகிறது. இந்நிலையில் நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் அருகே உள்ள ஆண்டியூர் கிராமத்தில் விவ சாயிகளின் விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படும் உயர் கோபுர மின் பாதை பணியின்போது  இழப்பீடு வழங்குவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் வழங்குவதாக சொன்ன இழப்பீடு தொகை முழுமை யாக வழங்கப்படவில்லை. இச்சூழலில் மின் கோபுரம் அமைக்கும் பணியினை விவசாயிகள்  தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், உதவி ஆட்சியர் மற்றும் இண்டூர் போலீசார் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங் கள் குறைகளை முறையிடலாம் என்று சமரசம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மின் கோபுரம் அமைக் கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டது. இப்போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது.