வேலூர், நவ. 18- தமிழகத்தில் மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை யும், உரிமையை பறிக்கும் வகையில் விவ சாய நிலங்களிடையே உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் மின் வழித்தடங்கள் அமைத்துள்ள நிலங்க ளுக்கு உரிய இழப்பீடும், மாத வாடகையும் நிர்ணயிக்க வேண்டும், புதிய மின் வழித்தடங் களை பூமிக்கு அடியில் கேபிள் மூலம் சாலை யோரம் அமைக்க வேண்டும், விவசாயி களின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் உயர் மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் ஆற்காடு பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவர் எல்.சி.மணி தலைமையில் நடை பெற்ற மறியல் போராட்டத்தில் மாநிலச் செய லாளர் துளசிநாராயணன், மாவட்டச் செயலா ளர் ப.சக்திவேல், சி.எஸ்.மகாலிங்கம், ஜி. நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி
விவசாய நிலங்களில் உயர்மின் கோபு ரம் அமைப்பதைக் கண்டித்து தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி போச்சம் பள்ளியில் சாலை மறியல் நடை பெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் பிர காஷ், தலைவர் கந்தன், வட்டத் தலைவர் சின்னசாமி, சபாபதி, சக்தி, கிருஷ்ணன், பாஞ்சாலராஜன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி
விளை நிலங்களில் உயர் மின் கோபு ரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் கூட்டுச் சாலையில் மாவட்டத் தலைவர் ஆர். தாண்டவராயன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மாவட்டச் செய லாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, பொருளாளர் வி.ரகுராமன், ஒன்றியச் செயலாளர் எம்.சி. ஆறுமுகம், சிபிஎம் வட்டச் செயலாளர் வை. பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.