tamilnadu

கோவையில் யுஏபிஏ சட்டப் பிரிவில் மூன்று பேர் கைது 

 கோவை, ஜூன் 15- ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய தாக சட்டவிரோத செயல்கள் தடுப்பு பிரிவில்  (யுஏபிஏ) கோவையில் மூன்று பேர் சனியன்று  கைது செய்யப்பட்டனர். இவர்களை வரும்  28-ம் தேதி வரை காவலில் வைக்க கோவை  மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இலங்கையில் தேவாலயங்களில் சமீபத் தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் கேரளா மற்றும் கோவையில் உள்ள சிலருக்கு தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் மற்றும்  என்ஐஏ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டு  வந்தனர். இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையைச் சேர்ந்த 6 இளைஞர்களுக்கு சர்வதேச அளவில்  தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்க மான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர் பிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படை யில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன்பின் முகமது அசாரூதின் என்பவரை  கைது செய்தனர்.  இதனைத்தொடர்ந்து கோவை அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான், கரும்புக் கடை யைச் சேர்ந்த ஹபிபுல்லா, வின்சென்ட் ரோடு  பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் ஆகியோ ரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் 3 பேரையும் கோவை பிஆர்எஸ் வளாகத்தில் உள்ள சிறப்புப் பிரிவு அலுவல கத்தில் வைத்து விசாரணை செய்தனர். இதில் இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொள்கைகள் மற்றும் தீவிரவாதச் செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மூலமாக பரப்பி வந்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து, இவர்கள் 3 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு  பிரிவின் (யுஏபிஏ) கீழ் வழக்குப்பதிவு செய்த னர்.  இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள ஷாஜகான், ஹபிபுல்லா, முகமது உசேன் ஆகிய 3 பேரையும் கோவை அரசு மருத்துவ மனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதன்பின் பந்தய சாலையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன்னி லையில் அவர்களை ஆஜர்படுத்தினர். இதனை யடுத்து மூவரையும் வரும் ஜுன் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.