tamilnadu

img

மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலைமறியல்

தாராபுரம்,  ஜூலை 18- தாராபுரம் அருகே இலவச மடிக் கணினி கேட்டு மாணவர்கள் புதனன்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தாராபுரம் அடுத்துள்ள தளவாய் பட்டிணத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 2017 ஆம் ஆண்டு பிளஸ் 2  படித்த மாணவர்கள்  தாராபுரம் உடுமலை  சாலையில் மடிக்கணினி கேட்டு திடீர்  சாலைமறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தகவலறிந்தது  அலங்கியம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து  மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள். இதில் தலைமையாசிரியரிடம் கடிதம் அளித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசி மடிக்கணினி கிடைக்க ஏற்பாடு செய் வதாக காவல்துறையினர் உறுதி அளித் தனர். இதையடுத்து சாலைமறியல் விலக்கி  கொள்ளப்பட்டது. இதனால் தாராபுரம் உடுமலை சாலையில் சிறிது நேரம் பர பரப்பு ஏற்பட்டது.