tamilnadu

img

ஆமை வேகத்தில் நடக்கும் சாலை பணி அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்

 நாமக்கல், ஆக.13- நாமக்கல் அருகே சாலை  பணிக்காக 3 மாதமாக கொட்டி வைக்கப்பட்டுள்ள ஜல்லி கற்களால் பொது மக்கள் கடும் அவதிக்குள் ளாகி வருகின்றனர்.  நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள நட ராஜபுரம் பகுதியில், 300க் கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின் றனர். ஐபிஏ சர்ச் மற்றும்  குடிசை மாற்று வாரிய குடி யிருப்புகள் அமைந்துள்ளன. இங்குள்ள  சாலையை சுமார் 2கி.மீ தூரத்துக்கு சீரமைத்து, புதிய சாலை அமைக்கும் பணி கடந்த 3 மாதத்துக்கு முன்பு துவங்கியது. இதற்காக சாலையின் நடுவில் ஜல்லிகற் கள் குவியல், குவியலாக கொட்டி வைக் கப்பட்டுள்ளது. ஆனால் 3 மாதமாகியும் சாலை அமைக்கும் பணி நடைபெற வில்லை. இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர்.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு அதிகமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். ஆனால் சாலை யின் நடுவில் ஜல்லிக்கற்கள் கிடப்பதால் வேறு வழியாக சுற்றி வரவேண்டிய நிலை உள்ளது. மேலும், சாலையின் இருபுறமும் உள்ள  குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சாலைப்பணி துரிதமாக நடைபெற மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.