tamilnadu

img

விண்வெளியில் உடைப் பிரச்சனை

மார்ச் 29ஆம் தேதி பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் பொறிகளை மேம்படுத்துவதற்காக கிறிஸ்டியானா கோச் மற்றும் ஆன்னி மெக்ளின் என்ற இரண்டு பெண் வீரர்கள் விண்வெளியில் மிதந்து செல்வதாக இருந்தது.இதுதான் முதன்முதலில் இரண்டு பெண்கள் ஒன்றாக விண்வெளி நடை(spacewalk) செய்வதாக இருந்திருக்கும் என்பதால் எல்லோரும் அதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.ஆனால் விண்வெளி உடை பொருத்தமாக இல்லாததால் ஆன்னி மெக்ளின் இதில் கலந்துகொள்ளமுடியவில்லை.  


விண்வெளி வீரர்கள் தங்கள் உடலுக்கு பொருத்தமான உடையில்(spacesuit) தரையில் பயிற்சி செய்கிறார்கள்.சிலர் ஒன்றிற்கு மேற்பட்ட அளவிலான உடையிலும் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். ஆன்னி மெக்ளின் மீடியம் மற்றும் லார்ஜ் அளவிலான உடையில் பயிற்சி செய்தார்.விண்வெளியில் நுண் ஈர்ப்பு விசையால் அவர் உடல் இரண்டு அங்குலம் வளர்ந்துவிட்டது.


மார்ச் 22ஆம் தேதி அவர் மீடியம் அளவு உடையில் விண்வெளியில் நடந்தார்.பின்னர் பெரிய அளவு உடை பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தார்.உடைகளை மாற்ற 12மணி நேரம் தேவைப்படும். ஆனால் கருவிகளை மேம்படுத்தும் செயல் அவசரமாக செய்ய வேண்டியிருந்ததால் அவருக்கு பதிலாக ஒரு ஆண் வீரர் கிறிஸ்டியானா கோச்சுடன் இணைந்து அதை செய்ய முடிவெடுக்கப்பட்டது. 


‘இது என்னுடைய பரிந்துரையின் பேரில்தான் செய்யப்பட்டது....குழுவின் பாதுகாப்பும் பணி முடிப்பதுமே முக்கியம்’என்கிறார் ஆன்னி மெக்ளின்.

‘நாங்கள் பாலின அடிப்படையில் முடிவுகள் எடுப்பதில்லை’என்கிறது நாசா.