திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியத்தில் உள்ள பொங்கலூர் வாக் குச் சாவடி மையத்தில் ஒரு வாக்குச்சாவடி முன்பாக ஒட்டப்பட்டிருந்த வேட்பாளர் பெயர், சின்னம், வாக்குச்சாவடி எண் உள்ளிட்ட விபரம் அடங்கிய சுவரொட்டி சரியாக ஒட்டப்படாமல் உரிந்து கீழே கிடந்தது. இதனால் இங்கு வாக்களிக்க வந்த வாக்காளர்கள் எந்த வாக்குச்சாவடி எந்த வார்டுக்கு உரியது என்பது தெரியாமல் குழம்பிப்போய் மற்ற வர்களிடம் கேட்டு உள்ளே சென்று வாக்களிக்கும் நிலை இருந்தது. எனினும் இதை அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்களோ, காவல் துறையினரோ யாரும் சரி செய்யாமல் கண்டும் காணாமல் இருந்தனர்.