tamilnadu

img

வட்டாட்சியர் அலுவலகத்தில் சுகாதாரமின்றி உள்ள கழிப்பிடங்கள்

அவிநாசி, ஏப்.23-அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள கழிப்பிடங்கள் சுகாதாரமின்றி உள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இதை உடனே பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றிற்கு பொது கழிப்பிடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டன. இக்கழிப்பிடத்தை பொதுமக்களுக்கும் பயன்படுத்துகின்றனர். தற்போது இந்த கழிப்பிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே கழிப்பிடத்தை உடனே பராமரித்து பயன்பாட்டிற்காக கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.