districts

img

திருப்பூண்டி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு சிபிஎம், பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

நாகப்பட்டினம், டிச.4 - கீழையூர் ஒன்றியம் திருப்பூண்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி சிபிஎம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடை பெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் திருப் பூண்டி மேற்கு ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குளறு படிகளை சரி செய்ய வேண்டும். மேம் படுத்தப்பட்ட சுகாதார மையத்தில் நிலவும் மருத்துவர் மற்றும் செவிலி யர் பற்றாக்குறையை போக்கி, நிரந்தரமாகவும் கூடுதலாகவும் மருத்து வர்களை பணியமர்த்த வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் வாரம் இரண்டு முறையாவது குடிநீர் வழங்க வேண்டும். வீடுகளுக்கு வழங்கிய குடிநீர் இணைப்புக்கு முறைகேடாக தரப்பட்டிருக்கும் பணத்தை திரும்ப தர வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட சுகா தார மையத்தின் சுற்றுச்சுவர் நான்கு ஆண்டுகளாகியும் சரி செய்யப் படாமல் உள்ளது. அந்த சுற்றுச்சுவரை உடனே சீரமைக்க வேண்டும். சுகாதார  மையத்தில் குடிநீர் மற்றும் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூண்டி மற்றும் அதனை சுற்றி யுள்ள அனைத்து பகுதி மக்களின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை, சுகாதாரத் துறை, காவல்துறை உள்ளிட்ட பல்துறை அதி காரிகள் கேட்டுக் கொண்டதன் பேரில்,  உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிக மாக ஒத்தி வைக்கப்பட்டது.  இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன், கீழையூர்  கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். அப்துல் அஜீஸ், கிளை செயலாளர்கள்  எம்.சாகுல் ஹமீது, எம்.மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.