tamilnadu

img

மத்திய மோடி அரசு நிறைவேற்றி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம்

மத்திய மோடி அரசு நிறைவேற்றி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சேலம் கோட்டை பகுதியில் பெண்கள் முன்னின்று நடத்தும் 12ஆவது நாள் தொடர் முழக்கப் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் வாழ்த்தி பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, எம்.குணசேகரன், அ.ஞான சௌந்தரி,  மாவட்டக்குழு உறுப்பினர் என்.பிரவீன் குமார், ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கணேசன், மாவட்டத் தலைவர் கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.