உதகை, மே 16- நீலகிரி மாவட்டத்தில் கடைகளை திறக்க அனுமதிப்பதுடன், வாழ்வாதா ரத்திற்காக போராடும் வணிகர்கள் மீது வழக்குகளைப் போட்டு அச்சுறுத் தும் போக்கை கைவிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் வி.ஏ.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப் பிக்கப்பட்டது. பிறகு படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அத்தியாவசிய கடைகள் உள்ளிட்ட பல கடைகளையும் திறக்க மாநில அரசு பல்வேறு உத்தரவுகளை வெளி யிட்டு வருகிறது. இதனால் சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநக ராட்சிகளிலும், நகராட்சிகளிலும் கடைகள் திறந்து செயல்பட்டு வருகின் றன. மார்க்கெட் கடைகளும் திறக்க அனுமதி அளிக்கப்படுள்ளது. ஆனால், நீலகிரி மாவட்டத்தில் கடைகளைத் திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல் வேறு இடங்களில் முறையான அனு மதியை அளிப்பதில்லை. தொடர்ச் சியான கோரிக்கைகளுக்கு பிறகே கடைகளைத் திறக்க அனுமதிக்கிறது. இருந்தாலும் கூட, அந்த கடைகளில் முறையான சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என அவ்வப்போது சீல் வைக்கப்படும் நடவடிக்கைகளும் தொடர்ந்து வண்ணம் உள்ளன.
இந்நிலையில், குன்னூரில் உள்ள மார்க்கெட் கடைகளை திறக்க வேண்டும் என வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்திய நிலையிலும், இன்று வரை அந்த கடைகள் திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அந்த கோரிக்கையை வலியு றுத்தக்கோரி துணை ஆட்சியரோடு பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற நீல கிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஆர்.பரமேஸ் வரன் மீது வழக்கும் பதிவு செய்யப் பட்டு இருக்கிறது. மாவட்ட நிர்வா கத்தின் இச்செயல் மிகவும் கண்டனத் துக்குரிய ஒன்றாகும். நீலகிரி மாவட் டத்தில் கொரோனா பாதிப்பு படிப்ப டியாக குறைந்து, நோயாளிகளே இல்லை என்ற நிலையை எட்டியி ருக்கும் போதிலும், கடைகளை திறக்க அனுமதி மறுப்பது என்பது வணிகர்க ளையும் பொதுமக்களையும் மிகுந்த இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாக்கும் செயலாகும். எனவே மாவட்ட நிர்வாகம் தனது பிடிவாத போக்கை கைவிட்டு ஊரடங்கு தளர்வு களை அறிவிக்கும் இந்த நேரத்தில், கடைகளை திறக்க அனுமதி அளிப்ப தோடு வணிகர்கள் மீதும், அந்த அமைப்பின் தலைவர்கள் மீதும் வழக் குகளைப் போட்டு அச்சுறுத்தும் போக் கையும் கைவிட வேண்டும்என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.