அன்றும்
நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து நாடாளுமன்றத்தில் 2011 குளிர்காலகூட்டத் தொடரின்போது பி.ஆர்.நடராஜன் கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய சுகாரதாரம் மற்றம் குடும்பநலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் பதிலளிக்கையில், மருத்துவர்கள் பற்றாக்குறையில் கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இடையில் ஏற்றத்தாழ்வு உள்ளது எனவும், பற்றாக்குறையை போக்கி ஏற்றத்தாழ்வை சரிசெய்ய இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கலந்து ஆலோசித்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றும்
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உள்ளிட்ட ஊழியர் பற்றாக்குறையுடன் நவீன மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படவில்லை. இந்நிலையில் 2019-20க்கான மத்திய பட்ஜெட்டில் ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற இலவசமருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.3000 கோடி ஒதுக்குவதாக மோடி அரசு அறிவித்தது. பின்னர் இத்திட்டத்தில், தனியார் மருத்துவமனைகளை அதிக அளவில் ஈடுபடுத்த, ‘நாட்ஹெல்த்’எனப்படும், இந்திய மருத்துவ சேவைகூட்டமைப்புடன், மத்திய அரசு அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழக அரசு கேட்ட, 350 கோடி ரூபாயைமத்திய அரசு இன்னும் வழங்கவில்லைஎன்கிற குற்றசாட்டும் எழுந்துள்ளது. மருத்துவ காப்பீட்டுத்திட்டங்கள் பொதுமருத்துவத்தை எந்த அளவுக்கு சீரழித்துள்ளது என்பதை நிரூபிக்கும் மற்றொருசெய்தி இது,‘ தமிழக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதற்கான காரணம் குறித்தும், அதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது’. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் மற்றொரு திட்டமே‘ஆயஷ்மான் பாரத்’