tamilnadu

img

துப்புரவு பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

துப்புரவு தொழிலாளர்களுக்கான ஆணைய உறுப்பினர் தகவல்

தருமபுரி, செப். 25- தமிழகத்தில் 32 ஆயிரம் தற் காலிக துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என துப்பரவு தொழிலாளர்களுக்கான ஆணைய உறுப்பினர் கூறியுள் ளார்.   தருமபுரி மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில், மத்திய அரசின்  சமூக நீதி மற்றும் அதிகாரமளித் தல் அமைச்சகத்தின் கீழ் செயல் படும் துப்புரவு தொழிலாளர் களுக்கான தேசிய ஆணைய  உறுப் பினர்  ஜெகதீஸ் ஹெர்மானி  தலை மையில்  துப்புரவு பணி செய்யும்  தொழிலாளர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் குறித்த ஆய்வுக்  கூட்டம் புதனன்று நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி  முன் னிலை  வகித்தார். இக்கூட்டத்தில்  துப்புரவு தொழிலாளர்களுக்கான தேசிய ஆணைய  உறுப்பினர் ஜெகதீஸ் ஹெர்மானி பேசிய தாவது,     தருமபுரி மாவட்ட துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகள்  மாவட்ட நிர்வா கத்தின்  சார்பில் நிறைவேற்றப் பட்டு வருகிறது. நீண்ட நாள் கோரிக்கைகள்  உடனடியாக நிறைவேற்றுவதாக  மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.  இதில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அளவில் பணி யாற்றும் ஒப்பந்த துப்புரவு பணி யாளர்களின் பணி பாதுகாப்பு  உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதில் அவர்களுக் கான ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட பண பலன்கள்  சரியான நேரத்தில் வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  தருமபுரி மாவட்டத்தில் மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சட்டத்தை நிறைவேற்றும் வகையில் அனைத்துத் துறைகளும் செயல் பட வேண்டும்.  துப்புரவுத் தொழி லாளர்களின் நலன் பாதுகாக் கப்பட வேண்டும்.  அவர்களின் உரிமைகளை அனைவரும் மதித்து  செயல்பட வேண்டும்.  

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அளவில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கான அடிப்படை தேவைகளை  அரசுத் துறை அலுவலர்கள் நிறை வேற்ற வேண்டும். தருமபுரி நக ராட்சிக்கு, சென்ற சுதந்திர தினத்தில் தமிழக அரசு சார்பில் சிறந்த நகராட்சிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது சிறப்பாக துப்புரவு பணிகள்  மேற்கொண்டமைக்காக வழங்கப் பட்டமையாக பார்க்கப்படுகிறது. மேலும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் இபிஎப் மற்றும் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் உடனடியாக இணைக்க வேண்டும். முழு உடல் பரி சோதனை செய்ய சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்றார்.  இதன்பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய ஜெகதீஸ் ஹெர்மானி,  கர்நாடக மாநிலத்தில்  13 ஆயிரம் ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம்  செய்யப்பட்டுள்ளனர்.  இதே  போன்று தமிழகத்தில் பணி யாற்றும் சுமார் 32 ஆயிரம் தற் காலிக துப்புரவாளர்களை பணி நிரந்தரம் செய்யும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது என்றார். முன்னதாக நகர பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலைய கழிவறைகள் மற்றும் அரசு  தருமபுரி மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் மேற்கொள் ளப்பட்டு வரும் தூய்மைப் பணி களையும்,  துப்புரவு தொழிலாளர் களுக்கான தேசிய ஆணைய  உறுப்பினர்  ஜெகதீஸ் ஹெர்மானி    நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. இராஜன், அரூர் சட்டமன்ற உறுப் பினர்  வே.சம்பத்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், அரூர்  கோட்டாட்சியர் புண்ணிய கோட்டி, மாவட்ட ஆதி திராவிடர்  நல அலுவலர் கோவிந்தன்,  பேரூ ராட்சிகள் உதவி இயக்குநர் ஜிஜாபாய், நகராட்சி ஆணை யாளர் மகேஸ்வரி, நகராட்சி பொறியாளர் கிருஷ்ணகுமார், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூ ராட்சி செயல் அலுவலர்கள் மற்றும்  துப்புரவு பணியாளர்  உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.