tamilnadu

சாக்லேட் என்று நினைத்து எலி மருந்தை உண்ட சிறுவன் பலி

கோவை, நவ.11-  கோவையில் சாக்லேட் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம், ஜெயா தம்பதியினர் மகன் முத்துச்செல்வம் (12). இச்சிறு வன் கோவை தெலுங்குபாளையம் பகுதியிலுள்ள தனது பாட்டி தென்மணி என்பவரது வீட்டில் தங்கி அருகில் உள்ள  அரசு பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந் நிலையில் கடந்த சனியன்று மாலை வீட்டில் எலியை பிடிக்க வைத்திருந்த எலி மருந்தை சாக்லெட் என நினைத்து முத்துச்செல்வன் உட்கொண்டுள்ளார்.  இந்நிலையில், வெளியே சென்ற அவரது பாட்டி தென்மணி வீட்டிற்கு வந்த போது முத்துச்செல்வன் வாயில் நுரை கக்கியபடி மயக்க நிலையில் இருந்துள்ளார்.  உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனை யில் அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திங்களன்று காலை முத்துச்செல்வன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதுகுறித்து செல்வபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  சிறுவன் பலி யான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற் படுத்தியுள்ளது.