கோவை, ஜூன் 16– பெண்டிரும் உண்டுகொல் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா கோவை யில் ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், பட்டிமன்ற பேச்சாளருமான கவிஞர் மீ.உமாமகேஸ்வரியின் பெண் டிரும் உண்டுகொல் என்கிற இரண்டா வது கவிதை நூல் ஞாயிறன்று வெளியிட் டப்பட்டது. தமுஎகச எல்ஐசி கிளையின் சார்பில் கோவை நவஇந்தியா சாலையில் உள்ள ஓட்டல் அக்சயம் கூட்டரங்கில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு கவிஞர் தங்கமுருகேசன் தலைமை தாங்கினார். ஜி.சுதா வரவேற்புரையாற்றினார். இக் கவிதை நூலை நூலாசிரியரின் பெற் றோர்கள் வெளியிட எழுத்துலக ஆளுமை கள் பூ.அ.இரவீந்திரன், த.திலிப்குமார், சி.ஆர்.ரவிந்திரன், பா.ப.ரமணி, கே.ஆர்.பாபு, பா.மீனாட்சிசுந்தரம், கே.துளசிதரன், கு.ப.சண்முகசுந்தரம், ப.மயில்சாமி உள் ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் பங்கேற்று சிறப்புரையாற்றி னார். பேராசிரியர் புனிதா ஏகாம்பரம், தமுஎகச நிர்வாகிகள் மு.ஆனந்தன், தி.மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன் னதாக இ.வெ.வீரமணி, தஞ்சை தமிழ் வாணன் ஆகியோரது கிராமிய முற் போக்கு பாடல்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழா நிகழ்வை அ.கரீம், இரா.பானுமதி ஆகி யோர் தொகுத்து வழங்கினர். நிறைவாக கவிஞர் மீ.உமாமகேஸ்வரி ஏற்புரையாற் றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக எஸ்.நாகலதா நன்றி கூறினார்.