தஞ்சாவூர், ஆக.. 9 - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லி யல்துறை மற்றும் இந்திய பெருங்கடல் ஆய்வு மையம் சார்பில், சிறப்பு சொற்பொ ழிவு மற்றும் நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. விழாவிற்கு, கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையின் தலைவர் வீ.செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். இதில், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மைய முன்னாள் வரலாற்று துறை தலைவர் கு.கன்னையா எழுதிய, “சோழமண்டலக் கடற்கரையில் ஆங்கிலேயர்களின் கடல் வாணிபம்-1681–1947 கடலூர் நகரமயமா தல்” என்ற ஒரு ஆய்வு நூலை, தமிழ் பல்கலைக்கழகப் பதிவாளர் சி.தியாகரா ஜன் வெளியிட்டார். அதனை சுவடிப்புல துறைத் தலைவர் த.கண்ணன் பெற்றுக் கொண்டார். விழாவில் கு.கன்னையா சிறப்பு ரையாற்றினார். விழாவில், தமிழ்நாடு அருங்காட்சியகத் துறை முன்னாள் உதவி இயக்குநர் ஜெ.ராஜா முகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.