districts

எது குற்றம்? : ஜூன் 1-ல் நூல் வெளியீட்டு விழா

தஞ்சாவூர், மே 28-  ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் க.மாணிக்கவாசகம் எழுதிய, “எது குற்றம்?” என்ற நூல் வெளியீட்டு விழா, ஜூன் 1 (புதன்கிழமை) மாலை, 5 மணிக்கு தஞ்சாவூர் தீர்க்கசுமங்கலி மஹாலில் நடைபெற உள்ளது.  உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, ஒரு நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற கடலூர் முன்னாள் ஆட்சியர் வி.அன்புச்செல்வன் தலைமையில் விழா நடைபெற உள்ளது. நூல் வெளியீட்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் டி.ராஜா, எஸ்.நாகமுத்து, வீ.சிவஞானம், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை சரகக் காவல்துறை துணைத்தலைவர் அ.கயல்விழி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா கந்தபுனேனி மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் பங்கேற்கின்றனர். நூலாசிரியர் க.மாணிக்கவாசகம் ஏற்புரையாற்றுகிறார்.