districts

img

உடுமலையில் தென்கொங்கின் தொன்மங்கள் நூல் வெளியீடு

உடுமலைப்பேட்டை வரலாற்று ஆய்வு நடுவத்தின் தென்கொங்கின் தொன்மங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா ஜிவிஜி கலையரங்கத்தின் நடைபெற்றது.

வரலாற்று ஆய்வுநடுவத் தலைவர் குமாராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழ்மரபு அறக்கட்டளை நிறுவனர், தலைவர் முனைவர்.சுபாஷினி பங்கேற்று நூலை வெளியிட்டார்.

விழாவில் பங்கேற்று பேசிய  சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்திகேய சிவ சேனாபதி பேசுகையில், 3 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தொல்காப்பியம், 2 ஆயிரத்து 600 வருடங்களுக்கு முன்பு சங்க இலக்கியம், 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு திருக்குறளை படைத்தது தமிழ் சமுதாயம். 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டில் சைவம், வைணவம் பற்றிய பக்தி இலக்கியம் மட்டுமே படைக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் தமிழர்களின் படைப்பு என்னவாயிற்று.

தொல்காப்பியத்தை உருவாக்கி, அறிவு சார்ந்த சமுதாயமாக இருந்த தமிழ் சமுதாயம், சங்க இலக்கியத்தில் தமிழ் சமுதாயம் உச்சத்தை தொட்டிருந்தது. சங்க இலக்கியம் உருவாக்கிய காலத்தில் 45 பெண் புலவர்கள் இருப்பதை நாம் அறியலாம். அன்று பெண்புலவர்கள் இருந்தார்கள் என்றால் அன்று கல்வி மறுக்கப்படாமல் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட்டு உயர்ந்த சமுதாயமாக இருந்திருக்க வேண்டும். அப்படி உயர்ந்த நிலையில் இருந்த தமிழ் சமுதாயம் கடந்த ஆயிரம் வருடங்களாக சின்ன, சின்ன வட்டங்களுக்குள்ளே கொண்டு வந்து இருட்டடிப்பு செய்யப்பட்டது. உயர்ந்த குடியாக இருந்த தமிழர்களின் நிலை கண்டு வருத்தப்பட்ட பி.எம்.நாயர், செட்டியார், நடேச முதலியார், தந்தை பெரியார் உள்ளிட்ட பலர் கல்வி, சமூகநீதி,  உணவு உள்ளிட்டவைகளை வழங்கி தமிழர்களை அறிவு சார்ந்த சமுதாயமாக மாற்ற முதலில் விதையை போட்டனர்.

அதனால் தற்போது இந்திய நாட்டில் பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. வரலாற்றை ஆவணப்படுத்தும் போதுதான் அது அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். இந்த புத்தகத்தை எழுதிய அருட்செல்வன் போன்ற ஒருவர் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்குடியில் வசித்து வந்த ரோஜாமுத்தையார், புத்தகங்கள் மீது இருந்த ஈடுபட்டின் காரணமாக , அவரது வாழ்நாளில் சுமார் 1 லட்சம் புத்தகங்களை சேர்த்து ஒரு நூலகமாக மாற்றினார். அவரது மறைவிற்கு பிறகு இதனையறிந்து, அமெரிக்காவை சார்ந்த பல்கலைக்கழகம் அவர் சேர்த்துவைத்திருந்த புத்தகங்களை குடும்பத்தாரிடம் இருந்து விலைக்கு வாங்கி, சென்னையில் ரோஜா முத்தையா நூலகமாக வைத்தார்கள். நூல்களை படிப்பதால் அறிவு பரிமாற்றம் ஏற்படும்.எனவே நாமும் நூல்களை படிக்க ஆர்வம் காட்டவேண்டும், கற்றது கை மண் அளவு, கற்காதது உலகளவு எனும் பழமொழிக்கேற்ப நாமும் நூல்களை வாங்கி வைத்து படித்தால் அது என்றாவது ஒருநாள் நமக்கு உதவும் என்றார்.

நூலை வெளியிட்டு பேசிய முனைவர் சுபாஷினி, நான் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றபோது, அங்குள்ள சுமார் ஆயிரம் அருங்காட்சியகத்தை பார்வையிட்டிருப்பதாக கூறியவர், ஜெர்மன் நாட்டில் சுமார் 6 ஆயிரத்து 900 அருங்காட்சியகங்கள் இருப்பதாகவும்,  அகல்வாய்வுப்பணி நடைபெறும் பகுதிகளில் அகல்வாய்வு கழகமே அருங்காட்சியத்தை அப்பகுதியில் அமைத்துவிடும். இந்தியாவில் ஒடிஸாவில் அருங்காட்சியங்கள் இருப்பதை போல தமிழகத்தில் உருவாக்க மக்களும், அரசாங்கமும் சேர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பது ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.

அதற்கு உதாரணமாக  கொடுமணலில் ஏராளமான சான்றுகள் கிடைத்துள்ளன. அவற்றை பாதுகாக்கவும், எல்லோரும் அறிந்து கொள்ளும்வகையிலும்  அருங்காட்சியத்தை அமைக்க அரசு முன்வர வேண்டும். அதுபோல உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்கும் சான்றுகளை சேகரித்து பாதுகாக்க உடுமலையில் ஒரு அருங்காட்சியத்தையும் அமைக்க வேண்டும் என்றார்.

விழாவில் பொள்ளாச்சி  நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை மக்கள் பேரவைத்தலைவர் முத்துக்குமாரசாமி, டாக்டர் சிவசண்முகம், நூலாசிரியர் அருட்செல்வன்,  உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நஞ்சேகவுண்டன்புதூர் மாகாளியம்மன் கும்மி ஆட்டக்குழுவினரின் பாரம்பரிய நடன நிகழ்சி நடைபெற்றது.