tamilnadu

img

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் துவங்கியது

உதகை,ஜன.31- வங்கி ஊழியர் சங்கத்தின்   பேச்சு வார்த்தை மீண்டும் தோல்வி யுற்றதால் வங்கிஊழியர் கூட்ட மைப்பு தொடர் வேலை நிறுத் தத்தை அறிவித்து வெள்ளியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை  அமல்படுத்த வேண்டும்  ஓய்வூதி யத்தை வழங்க வேண்டும். ஒப்பந்த  ஊழியர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கத்தினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகி றார்கள். இதையடுத்து மத்திய தலைமை தொழிலாளர் நல  ஆணையரிடம், வங்கி ஊழியர் கூட்டமைப்பு பிரதிநிதிகள்  கடந்த 27-ந்தேதி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் எந்த முடிவும்  எட்டப்படவில்லை. இந்நிலை யில் தொழிற்சங்கங்களின் கூட்ட மைப்பின் பிரதிநிதிகள் மீண்டும் 30 -ந் தேதி மும்பையில் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இதில் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு பிரதி நிதிகள் தங்களுடைய கோரிக்கை களை நிறைவேற்றித் தர வேண் டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் இந்த பேச்சு வார்த்தையி லும் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரு தினங் கள் வங்கி ஊழியர்கள் வேலை  நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப் பினர் தெரிவித்தனர். இதனடிப்படையில் வேலைநி றுத்தத்திற்கு ஆதரவாக வங்கி ஊழியர்கள் வெள்ளியன்று உத கையில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுசெயலாளர் ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் மண்டல செயலாளர் ஜே.விஷ்ணு மோகன் முன்னிலை வகித்தார். இப்போராட்டத்தை நீலகிரி மாவட்ட வங்கி ஊழி யர்கள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் கஜேந்திரன் துவக்கிவைத்தார். மாவட்டத் தலைவர் மாயா ஜெயராஜ், செய லாளர் கார்த்திக்,அகில இந்திய  வங்கி அதிகாரிகள் சங்கத்தின்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், இந்திய வங்கி ஊழி யர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் சசி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பொள்ளாச்சி

இதேபோல், கோவை மாவட் டம், பொள்ளாச்சி புதுரோட்டி லுள்ள யூனியன் வங்கி முன்பு  வெள்ளியன்று வேலை நிறுத்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வங்கி ஊழியர்கள் மற்றும் அதி காரிகள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் சீதாராமன் தலைமை வகித்தார். ஒருங்கி ணைப்பாளர் இந்துமதி வரவேற்று  பேசினார்.இதில்  வங்கி ஊழியர் கள் மற்றும் அதிகாரிகள் சங்கத் தின் ஐக்கிய கூட்டமைப்பின் பொள்ளாச்சி செயலாளர் ஜெயபிர காஷ் மற்றும் ரகுபதி, வி.சண்க மும் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.