tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு ஆதரவு

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு, ஆதித்தமிழர் கட்சியின் மாநில தலைவர் கு.ஜக்கையன் திங்களன்று தங்களது ஆதரவை தெரிவித்தார். மேலும், கோவையில் தங்களின் அமைப்பினர் மார்க்சிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றுவார்கள் என்றும் உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம் மற்றும் ஆதித்தமிழர் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.