கோவை, அக்.24– ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களையும் தட்டுப்பா டின்றி வழங்க வலியுறுத்தி சிஐ டியு பொதுத்தொழிலாளர் சங்கத் தின் சார்பில் கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நுகர்பொருள் வாணிபக் கழ கத்தில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண் டும். கணினி பிரிவு ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். சுமைப்பணி ஊழியர்களுக்கு எப்சிஐ ஊழியர்களுக்கு இணை யான ஊதியம் வழங்க வேண்டும். பொதுவிநியோகத்தை பலப் படுத்தி ரேசன் கடைகளில் அனைத்து பொருட்களையும் தட்டுப்பாடின்றி வழங்க வேண் டும். போனஸ் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொதுத்தொழிலாளர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கோவை கவுண்டம்பாளை யத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மண்டல தலைவர் வி.ஏழுமலை தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற் றினார். நுகர்பொருள் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மண்டல செயலாளர் கே.சரவணன், மாநில பொருளாளர் எம். ஏழுமலை, பொதுச்செயலாளர் ஆர். புவ னேஷ்வரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்ட நோக்கங்கள் குறித்து உரையாற்றினர். இதில் ஏராள மான ஊழியர்கள் பங்கேற்ற னர்.