சென்னை,ஏப்.26- வலுக்கட்டாயமாகக் கடன் வசூல் செய்தால் இனி சிறைத் தண்டனை வழங்கப்படும் எனச் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இனி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் பிணையில் வெளிவர முடியாத 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மசோதா தாக்கல் செய்துள்ளார்
வலுக்கட்டாய கடன் வசூலால், கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடனை வழங்கிய நிறுவனம் தற்கொலைக்குத் தூண்டியதாகக் கருதப்படும். கடன் பெற்றவரையோ அவரது குடும்பத்தினரையோ நிறுவனங்கள் மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களைப் பறிக்கவோ கூடாது எனவும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.