districts

உள்ளாட்சி துறை பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூன் 25 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில்  பணிபுரியும் உள்ளாட்சித் துறை நிரந்தரத் தொழிலாளர் களுக்கு பிடித்தம் செய்யப்பட்டுள்ள சேமிப்பு மற்றும் புதிய  ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு 52 மாதங்கள் கூடிய நிலுவையில் உள்ள தினக்கூலி ஊதியத் தொகையை வழங்க வேண்டும் உட்பட  8 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜெயங் கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில், ஏஐடியுசி உள்ளாட்சித் துறை  பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜெயங்கொண் டம் நகராட்சியில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக் கும் ஊதியம் வழங்க வேண்டும். தளவாடப் பொருட்கள் பாது காப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். ஏஐடியுசி மாவட்ட  துணை செயலாளர் தம்பிசிவம் தலைமை வகித்தார். சிபிஐ  மாவட்டச் செயலாளர் உலகநாதன், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் தண்டபாணி, மாவட்ட துணைச் செயலாளர் ராமநாதன்,  ராஜா பெரியசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.