திருவாரூர், ஏப்.7- டாக்டர் அம்பேத்கர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பில் முதல்வரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வெள் ளிக்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர்கள் பால சுப்பிரமணியன், முருகபாண்டியன் ஆகி யோர் தலைமை வகித்தனர். ஒருங்கிணைப் பாளர் முதுகலை ஆசிரியர் வேல்முருகன், ஆசிரியர்கள் தங்க சேகர், பிரபாகரன், தமிழ்ச்செல்வன், ஜெயகாந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், 01.01.2007-க்கு முன் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப் பட்ட பட்டப்படிப்புகளுக்கு அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதியம் வழங்கு வதுபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரி யர்களுக்கும் அரசாணை 83-ன் படி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், பட்டதாரி ஆசிரி யர் தகுதியுடன் இடைநிலை ஆசிரியருக்குரிய ஊதிய விகிதத்தில் பணியமர்த்தப்பட்டு 25 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்க ளாக இருக்கும் பட்டியலின ஆசிரியர்களை 01.06.2006 முதல் பட்டதாரி ஆசிரியர்களாக நிலை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.