நாமக்கல், ஜூலை 7- நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ஆண்டு தோறும் ரூ.1,000, 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையில் ரூ.3 ஆயிரம், 9 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 மற்றும் பட்டயப் படிப்புக்கு ரூ.4 ஆயிரம், பட்டப் படிப்புகளுக்கு ரூ.6 ஆயிரம், பட்ட மேற்படிப்புகளுக்கு ரூ.7 ஆயிரம் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப் படுகிறது. ஆகவே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி கள், மெட்ரிக். பள்ளிகளில் பயிலும் மாற்றுத்தி றனாளி மாணவ, மாணவியர், ஆட்சியர் அலுவல கத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து கல்வி உதவித் தொகை பெற்று பயனடையலாம் என தெரிவித் துள்ளர்.