திருச்சிராப்பள்ளி, ஜூலை 7- மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயி லாக கல்வி பயிலும் உடலியக்க குiறாபாடுடையோர், பார்வையற்றோர், காதுகேளாத மற்றும் வாய்பேச இய லாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி 1-ஆம் வகுப்புமுதல் 5-ஆம் வகுப்புவரை பயில்பவர்களுக்கு ரூ.1000ம், 6-ம் வகுப்புமுதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3000ம், 9-ம் வகுப்புமுதல் 12-ஆம் வகுப்புவரை பயில்பவர்களுக்கு ரூ.4000ம், இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.6000ம், முதுகலை பட்டம் பயில்பவர்களுக்கு ரூ.7000ம் என கல்வி உத வித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பார்வை யற்றோருக்கு கல்வி உதவித்தொகையுடன் வாசிப்பாளர் உதவித்தொகையாக 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்புவரை பயில்பவர்களுக்கு ரூ.3000ம், இளங்கலை பட்டம் பயில்பவர்களுக்கு ரூ.5000ம் மற்றும் முதுகலை பட்டம் பயில்பவர்களுக்கு ரூ.6000ம் சேர்த்து வழங்கப் பட்டு வருகிறது. தகுதியுள்ள கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மற்றும் மாணவியர்கள் திருச்சி கண்டோன்மெண்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பப்படிவம் பெற்று விண்ணப்பத்துடன் கல்வி பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்றொப்பம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், தனித்துவ அடையாள அட்டையின் நகல் மற்றும் ஆதார் அட்டை நகல், 9-ஆம் வகுப்பு மற்றும் அதற்குமேல் கல்வி பயில்பவராக இருந்தால் கடந்த ஆண்டின் மதிப்பெண் சான்று நகல், வங்கி கணக்கு புத்தக நகலுடன் வருகிற 30.7.2022ஆம் தேதிக்குள் விண் ணப்பித்து பயன்பெறலாம.; மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0431- 2412590-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.