districts

மாற்றுத்திறனாளி மாணவர் கல்வி  உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூர், ஜூலை 6- மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியருக்கு 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை ஆயிரம் ரூபாயும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை மூவாயிரம் ரூபாயும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை  நான்காயிரம் ரூபாயும், இளங்கலை பட்ட படிப்பிற்கு ஆறா யிரம் ரூபாயும், முதுகலை பட்ட படிப்பு, தொழிற்நுட்ப கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ஏழாயிரம் ரூபாயும் ஓராண்டிற்கு கல்வி உதவித் தொகை யாக வழங்கப்படுகிறது. மேலும் பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித்  தொகையாக 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மூவாயிரம் ரூபா யும் இளங்கலை பட்ட படிப்பிற்கு ஐந்தாயிரம் ரூபாயும்  முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழிற்நுட்ப கல்விக்கு  ஆறாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் 2022-23 ஆம் நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியருக்கான கல்வி உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ப.காய்த்ரி கிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அறை  எண்.6 கீழ்தளத்தில்; ஜூலை-31க்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளார்.