tamilnadu

img

இலவச மடிக்கணினி வழங்கக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

உடுமலை, ஜூலை 16- தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று இந்திய  மாணவர் சங்கம் தலைமையில் உடு மலையில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உடுமலை கல்வி மாவட்டத்தில் 21  அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல் நிலைப் பள்ளிகள் உள்ளன. ஆண்டுந் தோறும் இப்பள்ளிகளில் 4 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மேல் நிலைக்கல்வி படித்து முடித்துள்ளனர். ஆண்டு்தோறும் பிளஸ் 2 முடித்துச் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் உயர்கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் இலவசமாக ‘ மடிக் கணினி’ வழங்கப்பட்டு வந்தன. கடந்த கல்வியாண்டான 2017  - 2018   மற்றும் 2018 - 19 ஆகிய ஆண்டுகளில் படித்த பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை.  இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 பயின்று வரும்  மாணவர்களுக்கு மட்டும் இலவச மடிக் கணினி வழங்கப்பட்டு வருகின்றன.  இதனால்கடந்தகல்வியாண்டில்பயின்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும்  தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு சென்று  ஆசிரியர்களிடம், தங்களுக்கும்  மடிக் கணினி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் மாணவர் களுக்கு உரிய பதில் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் செவ்வாயன்று இந்திய  மாணவர் சங்கம் திருப்பூர் மாவட்டச் செய லாளர் பிரவின் தலைமையில், உடு மலையில் ஜிவிஜி மகளிர் மேனிலைப்பள்ளி மற்றும் எஸ்கேபி மேனிலைப்பள்ளி உள்ளிட்ட இரு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் மாணவர்கள் ஈடு பட்டனர்.  இதுகுறித்து மாணவர்கள் கூறு கையில், கடந்த இரண்டாண்டுகளாக தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங் கப்படவில்லை.  ஆனால் தற்போது பயின்று  வரும் மாணவர்களுக்கு மட்டும் வழங்கப் பட்டு வருகின்றன. அதனால் நிலுவையில் உள்ள மாணவர்களுக்கும் உடனடியாக மடிக்கணினி வழங்க வேண்டும்  என்று ஆவேசமாக கூறினர். தகவலறிந்து காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கல்வித்துறை அதி காரிகளின்  கவனத்திற்கு கொண்டு சென்று 15 நாட்களுக்குள் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.  இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து  சென்றனர். மாணவர்களின் போராட் டத்தால் பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.