கோவை, பிப்.13- கழிப்பறையை சுத்தம் செய்யச் சொல்லி மாணவியை வற்புறுத்திய பள்ளி தலைமை ஆசிரியர் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை யுடன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் பெரியநாயக்கன்பா ளையம் காவல்நிலையத்தில் வியாழ னன்று புகார் மனு அளித்தனர். இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கோவை மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி கூறுகையில், கோவை நரசிம்மநாயக்கன் பாளை யத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியராக குமரேஸ்வரி பணிபுரிந்து வருகிறார். இந்நிலை யில், இப்பள்ளியில் படிக்கும் அருந்த திய வகுப்பைச் சேர்ந்த மாணவி ஒருவரை இரண்டு வாரங்களாக தொடர்ச்சியான முறையில் கழிவ றையை சுத்தம் செய்யச் சொல்லி தலைமையாசிரியர் நிர்பந்தித் துள்ளார். மேலும், சாதிரீதியாக கடுமை யான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனவேதனைடைந்த மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டி லேயே இருந்து வருகிறார். எனவே, சாதிய கண்ணோட்டத்துடன் மாண வியை திட்டி கழிவறையைச் சுத்தம் செய்ய நிர்பந்தித்த தலைமையாசிரியர் மீது உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என புகார் மனு அளித்துள் ளதாக தெரிவித்தனர். முன்னதாக பாதிக்கப்பட்ட குழந் தையின் பெற்றோருடன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியச் செயலாளர் ந.ராஜா, இந்திய மாணவர் சங்க செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட் நிர்வாகிகள் பெரியநாயக்கன்பாளை யம் காவல் ஆய்வாளரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.