கோவை பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி மற்றும் கூடலூர் பேரூராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் பணியாளர்க ளுக்கு ஊதியம் குறைத்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிஐடியு கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடை பெற்றன. இதன் எதிரொலியாக தற்போது ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பணியாற்றும் ஊழியர்கள், சங்க தலைவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்த னர். இந்நிகழ்வில் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.ரத்தின குமார், உதவி செயலாளர் இராமமூர்த்தி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.