பி.ஆர்.நடராஜன் எம்.பி.,க்கு உற்சாக வரவேற்பு
கோவை, அக். 2- நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பி.ஆர்.நடராஜன் எம்.பி. கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகு திக்குட்பட்ட எஸ்.எஸ்.குளம் ஒன்றிய பகுதி யில் புதனன்று நன்றி அறிவிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி யின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.ஆர்.நடராஜன் வெற்றிபெற்றார். இதனையடுத்து எஸ்.எஸ்.குளம் ஒன்றிய பகுதியில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களோடு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏராளமானோர் சால்வை அணிவித்து, உற்சாக வரவேற்பளித்தனர். கைகோளாமபாளையத்தில் துவங்கிய நன்றி அறிவிப்பு பிரச்சார இயக்கம் செரை யாம்பாளையம், குரும்பாளையம், கோவில் பாளையம், கோட்டை, அத்திப்பாளையம், இடிகரை, கீரணத்தம், வையம்பாளையம், இடிகரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நன்றி அறிவிப்பு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்சியில் திமுக வடக்கு மாவட்ட பொருளாளர் மணி, மாவட்டதுணை செய லாளர் சுப்பையன், ஒன்றிய செயலாளர் சுரேஷ், மதிமுக ஒன்றிய செயலாளர் பால குருசாமி, காங்கிரஸ் வட்டார தலைவர் நாக ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன் றிய செயலாளர் விசுவநாதன், கொமதேக ஒன்றிய செயலாளர் சுதாகர், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய செயலளார் முத்துவள வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் ஆர்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் ஈஸ்வரன், பாரதி உள் ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.