tamilnadu

தைப்பூசத்திற்கு சிறப்பு ரயில் சேவை பி.ஆர்.நடராஜன் எம்.பி., கோரிக்கை ஏற்பு

கோவை, பிப்.1–  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கோரிக்கையையேற்று தைப்பூசத்தையொட்டி பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.  ஜனவரி 7 ஆம் தேதி சேலத்தில் நடை பெற்ற தெற்கு ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற கோவை நாடாளுமன்ற  உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பொங்கல் பண் டிகையையொட்டி தென்மாவட்டங்களை இனைக்கும் வகையில் ராமேஷ்வரத்திற்கு சிறப்பு ரயிலும், பழனி தைப்பூச திருவிழா வையொட்டி கோவையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் சேவையும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். இத னையடுத்து கடந்த 14 ஆம் தேதி பொங்கலை யொட்டி ராமேஷ்வரத்திற்கு இரண்டு நாட் கள் சிறப்பு ரயில் சேவை வழங்கப்பட்டது.  இந்நிலையில் தற்போது தைப்பூசத்திற்கு கோவையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் சேவையை ரயில்வேதுறை அறிவித்துள்ளது. இதன்படி ஞாயிறன்று (இன்று) காலை 9.45  மணிக்கு கோவையில் இருந்து  பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை, மெய்வாடி, மடத்து குளம், புஷ்பத்தூர் வழியாக மதியம் 12.45 மணிக்கு பழனியை சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக மதியம் 1.45க்கு பழனியில் இருந்து புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக மாலை 4.45 மணிக்கு கோவை வந்தடைகிறது. பத்து பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயில்சேவை பிப்.12 ஆம் தேதி வரை 11 நாட்கள் இயக்கப்படு கிறது.  இதுகுறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பழனியில் நடைபெறும் தைப்பூச திருவிழா விற்கு கோவையில் இருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் செல்வார்கள். ஆகவே சிறப்பு ரயில் இயக்குவதற்கு மக்கள் என்னிடம்  கோரிக்கை வைத்தனர். அதனையேற்று  ரயில்வே துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தேன். தற்போது 11 நாட்கள் கோவை யிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில் சேவை  இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு  வரவேற்கத்தக்கது. இதற்காக ரயில்வே துறைக்கு கோவை மக்களின் சார்பில்  நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இச்சேவையை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.