tamilnadu

img

பஞ்சமி நிலங்களை மீட்கக்கோரி  வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

மேட்டுப்பாளையம், மார்ச் 5- பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களுக்கு வழங்கிடக்கோரி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலு வலகம் முற்றுகையிடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டியிலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் முறைகேடாக பலரும் ஆக்கிரமிப்பு செய்துள்ள னர். ஆகவே, அவற்றை உடனடியாக மீட்டு உரியவர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி மேட்டுப் பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக நீதி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  முன்னதாக, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி யபடி ஊர்வலமாக வந்தவர்கள் வட்டாட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்பின் வட்டாட்சியர் அலுவலகத்தின் உள்பகுதி  நோக்கி செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத் தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்படவே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் முக்கிய நிர்வாகிகளை அழைத்து வட்டாட்சியர் சாந்தாமணி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விரைவில் பஞ்சமி நிலம் குறித்து ஆய்வு நடத்தப்படும், அவை சட்ட விரோதமாக ஆக்கிர மிப்பு செய்யபட்டிருப்பது கண்டறியப்பட்டால் மீட்கப்ப டும் என உறுதிமொழி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.