tamilnadu

img

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

தாராபுரம், மே 15 -தாராபுரத்தில் குடிநீர் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.தாராபுரம் அடுத்த மரவாபாளையத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் மாநில தலைவர் அ.சு.பவுத்தன் தலைமையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் வட்டாட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, மரவாபாளையம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் விநியோகம் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை. மேலும் வரும் குடிநீரும்துவர்ப்புடன் வருகிறது. எனவே கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் தூய்மையானகுடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்துசென்றனர். வட்டாட்சியரிடம் மனு அளித்தபோது அப்பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீரை பாட்டிலில்எடுத்து வந்து வட்டாட்சியரிடம் காண்பித்தனர்.