tamilnadu

img

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

 கோவை. பிப். 13 –  மாணவிகளுக்கு பாலி யல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி தலைமையாசி ரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு  வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் கடந்த வாரம் தங்களது பெற்றோரிடம் பள்ளியில் பணிபுரி யும் தலைமையாசிரியர் மாகாளியப்பன் தகாத முறையில் நடந்துகொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இதையடுத்து கடந்த திங்கட்கிழமை அப்பகுதிமக்கள் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆனால் புகார் அளித்தால் மட்டுமே தலைமையா சிரியர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் கோவை  மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.  இதற்கிடையே அந்த தலைமை ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அலுவலர் புதனன்று உத்தரவிட் டார். இதனையடுத்து இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந் தைகள் பாதுகாப்பு நல அதிகாரியிடம் புகார் அளித்தனர்.  இதனைத்தொடர்ந்து, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சாந்தாமணி புதனன்று நெகமம் காவல்நிலையத்தில் தலைமையாசிரியர் மாகாளியப்பன்  மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார். இந்த  புகாரின் பேரில் தலைமையாசிரியர் மாகாளியப்பன் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.