tamilnadu

img

பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறை ஒழிப்பு கமிட்டி அமைத்திடுக

நாமக்கல், மே 5-பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறை ஒழிப்பு கமிட்டி அமைக்க வேண்டும் எனசிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு மாவட்டமாநட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நாமக்கல் மாவட்ட 3 வது மாநாடு சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் ஞாயிறன்று மாவட்ட கண்வீனர் எல்.ஜெயக்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் ரேவதி வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.முருகேசன் துவக்கி வைத்து பேசினார். மாநில இணை கன்வீனர் ஆர்.மணிமேகலை, சிஐடியு மாவட்ட செயலாளர் ந.வேலுசாமி, மாவட்ட தலைவர் பி.சிங்காரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.முன்னதாக, இம்மாநாட்டில் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறை ஒழிப்புகமிட்டி அமைக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.21 ஆயிரத்தை தாமதமின்றி அரியர்ஸ் உடன்வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதிலேயே ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். கொல்லிமலை, இராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் மற்றும் அதற்கு ஆதரவாக ஈடுபட்டவர்களை பாரபட்சமின்றி கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இம்மாநாட்டில் புதிய மாவட்ட கன்வீனராக எல். ஜெயக்கொடி, இணை கன்வீனர்களாக எஸ்.பூங்கொடி, வசந்தி, செந்தாமரை, செல்லம்மாள், ரேவதி, பூங்கொடி,பாண்டிமாதேவி, ஸ்டெல்லாமேரி, நீலமணி ஆகியோர் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.