கோவை, ஜூன் 9 - ஆறாம் வகுப்பில் சேர மாணவர் களுக்கு நுழைவுத்தேர்வு நடத்திய கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நி லைப் பள்ளிக்கு சீல் வைத்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற் கொண்டார்.
கோவை டவுன்ஹால் அருகே உள்ளது சிஎஸ்ஐ ஆண்கள் உயர் நிலை பள்ளி. அரசு உதவிபெறும் இப்பள்ளியில் கடந்த இரு தினங்க ளாக ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தினமும் 10 முதல் 15 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்துள் ளது. இந்நிலையில் பள்ளியில் நுழைவு தேர்வு நடப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பிரேம் என்பவர் புகை படம் மற்றும், வீடியோ ஆதாரங்களு டன் புகார் அளித்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சி யர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் தெற்கு வட்டாட்சியர் அருள்முருகன் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற் கொண்டனர். பள்ளி முதல்வர் மெர்சி மெட்டில்டா அறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்தை முழுமையாக ஆய்வு மேற் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து பள்ளி முதல்வர் அறை, நுழைவுத் தேர்வு நடத்திய பகுதி என அனைத்தை யும் மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். நுழைவுத் தேர்வு நடத்தியது தொடர் பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரி வித்தார்.
மேலும், பள்ளி நிர்வாகத்தை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்வுக்கு ஹால் டிக்கெட் வழங்கவே பள்ளி வளாகம் திறக்கப்பட்டு இருந்த தாகவும் , பள்ளி திறக்கப்பட்டு இருப் பதை அறிந்த பெற்றோர் தங்கள் குழந் தைகளுடன் பள்ளியில் சேர்க்கை நடை பெறுகின்றதா என பார்க்க வந்ததாக வும், நுழைவுத்தேர்வு எதுவும் நடத்தப்ப டவில்லை எனவும் தெரிவித்தனர். இந்த நுழைவுத் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.