சேலம், பிப். 3- சேலம் அருகே குடியிருப்பு பகு திக்கு மிக அருகே குப்பைகளை கொட்டி எரிக்கப்படுவதால் அப்ப குதியில் சுகாதார சீர்கேடு ஏற்படு வதோடு பல்வேறு நோய்த் தொற் றுகளுக்கு ஆளாவதாக கூறி அப்ப குதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற் பட்ட பொதுமக்கள் பதாகைக ளுடன் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி யில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில், தேக்கம்பட்டி அருகே செட் டிச்சாவடி மாநகராட்சியின் குப்பை கிடங்கு அமைந்துள்ள து. இதனால், பொதுமக்கள் குடியி ருப்பு பகுதிக்கு மிக அருகிலேயே சேலம் மாநகரம் முழுவதும் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதால் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மாசு அடைந்து வரு கிறது. மேலும், தினந்தோறும் குப்பைகளை எரிப்பதால் அந்தப் பகுதியில் காற்று மாசடைவது, மூச் சுத் திணறல் உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக பதாகைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட் டது. இதையடுத்து பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டிருந்த காவல்துறை யினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஐந்து நபர்களை மட்டும் ஆட்சியரிடம் மனு அளிக்க அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை கொட்ட வேண்டுமெனவும் குடியிருப்புப் பகுதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகா ரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதில் திமுக ஒன்றிய கவுன்சி லர் சிவஞானவேல், சிபிஎம் சார் பில் ஜோதிபாசு உள்ளிட்ட பாதிக் கப்பட்ட மக்கள் திரளானோர் பங் கேற்றனர்.