தாராபுரம், மார்ச் 25 - தாராபுரம் செட்டியார் தோட்டம் பகுதியில் சுகா தாரச் சீர்கேட்டை ஏற்படுத்து வகையில் செயல்பட்டு வருபவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் நகராட்சியில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, நாச்சி முத்துபுதூர் குறுக்கு தெரு, செட்டியார் தோட்டம் முதல் வீட்டில் குடியிருக்கும் வேலுச்சாமி என்பவர் தனது வீட்டிற்கு முன்பாக சுகாதார சீர்கேட்டை ஏற்ப டுத்தும் வகையில் எருமைமாட்டின் சாணம், சிறுநீர் மற்றும் கழிவுநீரையும், குப்பைகளையும் தேக்கி வைத்துள்ளார். இதனால் கொசு உற்பத்தியாகி அப் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மக்கள் பயன்படுத்து சாலையில் கால்நடைகளை கழுவுகி றார். மேலும் பொது சாலையை ஆக்கிரமித்து ஹாலோ பிளாக் கற்கள், விறகு கட்டைகளையும் போட்டு வைத்துள்ளார். மேலும், அந்தச் சாலையில் எந்த அனு மதியும் பெறாமல் சட்ட விரோதமாக சொந்த செல வில் கரடு முரடாக இரண்டு வேகத்தடைகளை அமைத்துள்ளார். இதனால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட நகராட்சி மேலாளர் நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.