tamilnadu

சேலம் மற்றும் தருமபுரி முக்கிய செய்திகள்

ஔவையார் விருதுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம், ஜன. 10- உலக மகளிர் தின விழாவில் பெண் களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு ஒளவையார் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது  என  சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரி வித்துள்ளார்.  உலக மகளிர் தின விழாவில் பெண் களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு ஒளவையார் விருது வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தெரிவித் ததாவது:-பெண்களின் முன்னேற்றத் த்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2019 –  2020 ஆம் ஆண்டில் உலக மகளிர் தின விழா வில் “ஒளவையார் விருது” வழங்க விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண் ணப்பங்கள் ஜன.13ஆம் தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக் குமாறு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப் பிக்க தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்ட வராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவ டிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையிலான தொடர்ந்து பணியாற்றுபவராக இருத்தல் வேண்டும். மேலும், கையேட்டில் பொருளடக்கம் மற்றும் பக்க எண், உயிர் தரவு (bio dada) மற்றும் புகைப்படங்கள் (2), சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படங் களுடன் சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின்/சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பய னாளிகள் பயனடைந்த விவரம் தொண்டு நிறுவனத்தின் பகிர்வு, சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலை யத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நட வடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று, இணைப்பு – படிவம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) முழுமையாக பூர்த்தி செய்து மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பொ.துரிஞ்சிப்பட்டியில் ஜன. 22-ல் மக்கள் தொடர்பு  திட்ட முகாம்

தருமபுரி, ஜன. 10- தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி உள்வட்டம் - பொ.துரிஞ்சிப்பட்டி  கிராமத்தில் வருகிற ஜன.22ஆம் தேதியன்று காலை 10 மணிக்கு மாவட்ட  ஆட்சியர் எஸ்.மலர்விழி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்  நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க உள்ளார்கள். எனவே தருமபுரி மாவட்டம்,  பாப்பிரெட்டிப்பட்டி  வட்டம், பொம்மிடி உள்வட்டம் - பொ.துரிஞ்சிப்பட்டி கிரா மம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர்  எஸ்.மலர் விழி தெரிவித்துள்ளார்.