தாராபுரம், நவ. 17 - தாராபுரத்தில் ஊரக வளர்ச்சி உள் ளாட்சித்துறை ஊழியர் சங்க கிளை துவக் கப்பட்டது. இதையொட்டி கொடியேற்று விழா மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. தாராபுரம் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்கள் சார்பில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க கிளை துவக்கப்பட்டது. சிஐடியு திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் கொடி யேற்றி வைத்தார். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம் சங் கத்தின் பெயர் பலகையை திறந்து வைத் தார். இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட துணைதலைவர் என்.கனகராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிஐடியூ நிர்வாகிகள், ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க கிளை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.