நாமக்கல் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் 43 சிறுபாசன குளங்களிலும், ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் 152 குட்டைகளிலும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஆழப்படுத்துதல், வரத்து வாய்க்கால் சீரமைத்தல், மதகுகள் சீரமைத்தல் மற்றும் கரைகள் பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒருபகுதியாக வீசாணம் ஊராட்சியில் உள்ள சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரி ஆகிய ஏரிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ். பார்வையிட்டார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, நாமக்கல் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட ஊரக வளர்ச்சித் துறை பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.