tamilnadu

img

சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்

நாமக்கல், ஜூலை 4-  தொழிலாளர் விரோதப் போக்கில் ஈடுபடும் நெடுஞ் சாலைத்துறை நிர்வாகத்தைக் கண்டித்து தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் நாமக்கல் நெடுஞ் சாலைத்துறை  அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடைபெற்றது. சாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என 13 ஆண்டு காலமாகப் போராடி வரும், சாலைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு  வழங்க வேண்டும் என கருப்புத் துணியை வாயில் கட்டி போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தொழிற்சங்கம் அமைப்பதற்கு எதிராக  காவல் துறையின் மூலம் அடக்குமுறையை ஏவும் முதன்மை இயக்குனருக்குப் பதிலாக ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் வலியுறுத் தினர்.  இபபோராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் பழனி சாமி, ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்ட பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.