tamilnadu

img

ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரணம்

திருவாரூர்: அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கம் ஆகியவை சார்பில் திருவாரூரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் முடி திருத்துவோர் குடும்பங்களைச் சேர்ந்த 250 நபர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிவேல், தொழிற்சங்க தலைவர்கள் எம்.சௌந்தரராஜன், செந்தில் குமார், தெட்சிணாமூர்த்தி மற்றும் மருத்துவர்கள், கொரோனா நோய்த் தடுப்பு பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.