உதகை, மே 22 - கூடலூர் கோட்டத்திற்குட்பட்ட பழங்கு டியின மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா வழங்கினார். நீலகிரி மாவட்டம், கூடலூர் கோட்டத் திற்குட்பட்ட தேவர்சோலை, பேரூராட்சி கவுண்டன் கொல்லி மற்றும் மசினக்குடி ஊராட்சி, ஆணைகட்டி ஆகிய மலைவாழ் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பழங்கு டியின மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு புதனன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா 240 பழங்குடியின மக்களுக்கு கொரோனா நிவா ரணப் பொருட்களை வழங்கினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் பேசு கையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக புதிய கொரோனா தொற்று இல்லை என்ற நிலை தொடர்கின் றது. இந்நிலையில் ஊரடங்கு அமல்படுத் தப்பட்டு பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளதால் எல்லையோர கிரா மங்களில் வசிக்கும் பழங்குடியின மக்க ளுக்கு அத்தியாவசிய மளிகைப் பொருட் கள் அடங்கிய தொகுப்பு தொடர்ந்து வழங் கப்பட்டு வருகிறது.
அதன்படி, தேவர்சோலை பேரூராட்சி கவுண்டனக்கொல்லி கிராமத்தில் 123 பழங்குடியின மலைவாழ் மக்களுக்கும், மசி னக்குடி ஊராட்சி ஆணைகட்டி கிராமத்தில் 117 பழங்குடியின மலைவாழ் மக்களுக்கும் 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் அடங்கிய மளிகை தொகுப்பும், காய்கறித் தொகுப் பும் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறி னார். இதைத்தொடர்ந்து பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் கவுண்டன் கொல்லி பகுதியில் 87 பயனாளிகளுக்கும், குட்டமங்களம் பகுதியில் 10 பயனாளிக ளுக்கும் தலா ரூ 2.10 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சி யர் நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.