india

img

ஆதிவாசி மக்கள் ஆவேசப் போராட்டம்

புதுதில்லி, நவ. 21- ஆதிவாசி மக்களின் வன உரிமை யை உறுதிசெய்யும் 2006 வன உரிமைச் சட்டத்தை எந்தவிதத்திலும் நீர்த்துப் போகச் செய்யாமல் முழுமையாக அமலாக்க வேண்டுமென்றும், இந்த சட்டம், மலைவாழ் மக்களுக்கு உறுதி செய்துள்ள வனங்களின் மீதான உரிமையை மறுக்கும் விதத்தில் மத்திய வனத்துறை அமைச்சகம் செயல்படுவதை கண்டித்தும், இது தொடர்பான வழக்குகளில் உச்சநீதி மன்றம் வன மக்களின் உரிமையை பாதுகாக்கும் விதமாக தீர்ப்பளிக்கக் கோரியும் தில்லி ஜந்தர்மந்தரில் நவம்பர் 21 வியாழனன்று பல்லா யிரக்கணக்கான ஆதிவாசி மக்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ‘பூமி அதிகார் அந்தோலன்’ என்ற பதாகையின் கீழ் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் உள்பட நாடு  முழுவதும் உள்ள ஆதிவாசி மக்கள் இயக்கங்கள் பங்கேற்புடன் நடை பெற்றது. இந்த மாபெரும் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் ஹன்னன் முல்லா, விஜு கிருஷ்ணன் உள்ளிட்டோரும் தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் பெ.சண் முகம், டி.ரவீந்திரன், இரா.சர வணன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.